Ganesha idols without permission near Perambalur: Police seize them; Communist, BJP protest! About 100 people were arrested!!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட கை.களத்தூர் ஆதிதிராவிடர் தெருவில் நேற்று விநாயகர் சிலையை வைத்து, வழிபடுவதற்காக கைகளத்தூர் போலீசில் அனுமதிக்கான கடிதம் கொடுத்து விட்டு, சிலையை வைத்து விழா ஏற்பாடு செய்த நிலையில், நள்ளிரவில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சிலைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பெரம்பலூர் – சின்னசேலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாக பொதுமக்களுடன் அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சியினரும் மறியலில் கலந்து கொண்டு காவல் துறைக்கு எதிராக கோசமிட்டனர். போலீசார் அவர்களிடம், வருவாய் மற்றும் காவல் துறையினர் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் சமரமடையாததால், 54 பேரை கைது செய்த போலீசார் நெற்குணத்தில் உள்ள கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.
விளம்பரம்:
இதே போல, வி.களத்தூர் கிராமத்தில், உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்ததாக கூறி 2 பிள்ளையார் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் இந்து அமைப்பினர் என 24 பெண்கள் உட்பட 47 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு வைக்கப்பட்ட 126 இடத்தில் மட்டுமே சிலைகள் வைக்க இந்த அனுமதி அரசாங்கத்தில் இருந்து வந்துள்ளது. பலர் புதிதாக அனுமதி கேட்டு உள்ளனர். அதை வழங்க முடியாத நிலையில் உள்ளோம். புதிய சிலைகள் அனுமதி மறுக்கப்படுகிறது. அரசாங்கம் உத்தரவிடுவதை நாங்கள் செயல்படுத்துகிறோம், என தெரிவித்தார்.
விளம்பரம்:
ரூ. 1 செலுத்தி வரும் 144 நாட்களுக்கு வரன் தேடுங்கள் https://dsmatrimony.net/
சாலைமறியல்:
பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரும்பாவூர், பாடாலூர், புதுவேட்டக்குடி பகுதியில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட அரும்பாவூர், பாடாலூர், குன்னம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைது செய்தனர்.