Gemini Grand Circus Performers Delight Fans With Adventures: Huge Welcome in Perambalur!
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில், ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் பிரம்மாண்ட கூடாரம் அமைத்து, சர்க்கஸ் நடத்தி வருகிறது. சுமார் 73 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் இந்த சர்க்கஸ் கம்பனி முதல் முறையாக பெரம்பலூருக்கு வந்துள்ளது.
பொழுது போக்கு அம்சமே இல்லாத காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த சர்க்கஸ். தற்போது, பெரம்பலூரில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, சர்க்கஸ் வந்துள்ளதால், குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக கண்டுகளித்து வருகின்றனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் நடக்கும் காட்சியில், இடைவிடாமல், கலைஞர்களின் சாகச நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளை, நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வண்ண விளக்கு ஒளிகளால் கட்டி போட்டுள்ளது. அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை சோர்வடையாமல் ஆனந்தமாய் கலைஞர்கள் அசத்துகின்றனர்.
உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலத்தில், செல்போன்களுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விட்டனர். ஆனால், நிகழ்த்து கலைகளில் ஒன்றான இந்த சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகள் தற்போதைய தலைமுறைக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.
உடலால் இப்படியும் சாகசம் செய்ய முடியுமா? என மெய்சிலிர்க்கின்றனர். கர்ணம் தப்பினால் மரணம்தான், ஆனால், உயிருக்கு அஞ்சாமல் திறமையை கலைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர். சினிமாவை விட நிஜக்காட்சிகள் அதிகமாக இருப்பதால் ரசிர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தால், யானை, புலி, சிங்கம், ஒட்டகம், மனிதக்குரங்கு, கிளிகள், சாகசம் நடத்த அரசு தடை விதித்து விட்டதால், அதற்கு பதிலாக குழந்தைகளை குதுகலப்படுத்த ரோபடிக் அனிமல்ஸ் காட்சிக்கு வைத்துள்ளனர்.
சர்க்கசில், குழந்தைகள் சிரிப்பொலியையே அதிகளவிற்கு கேட்க முடியும். அந்தரத்தில் நடக்கும் விதவிதமான பார் விளையாட்டுகள், பால் மேஜிக் , ஸ்கேட்டிங் சாகசம், கயிறு சாகசம், மெழுவர்த்தி சாகசம், ஆப்பிரிக்கன் சர்க்கஸ், பெண்கள் சாகசம் , மனித குரங்கு வேடம், திரைசீலை சாகசம், அமெரிக்கன் வீல் ஆப் ஸ்பேஸ், அரிக்கன் அரபோடிக்ஸ் பிரமிடு, குல்லா கூப், ரிங் பேலன்ஸ், ஸ்டேட்டியூ ஆக்ரொபட், ரோலர் பேலன்ஸ் , ஆப்பிரிக்காவை சேர்ந்த எத்தியோப்பியர்களின் கம்பி சாகசம், மங்கைகளின் சைக்கிள் சாகசங்கள்,
ஆப்பிரிக்கர்களின் டான்ஸ், நெருப்பு விளையாட்டுகள், கூண்டுக்குள் 2 பேர் பைக் ஓட்டுதல் போன்றவைகள் ஒவ்வாரு வினாடியும், ரசிர்களை வியப்பில் ஆழ்த்துகின்றனர் சாகச கலைஞர்கள்.
சினிமா, யூடியூப், ப்ரி பையர், பேஸ் புக், போன்றவை இல்லாத காலத்தில் வந்த சர்க்கஸ் இன்னமும், அவற்றுடன் விடாப்பிடியாக போட்டி போட்டு ரசிர்களை கவர்ந்துள்ளது சர்க்கஸ் கலைஞர்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். இந்தியாவில் 50 சர்க்கஸ் கம்பனிகள் இருந்து தற்போது 5 மட்டுமே எஞ்சி உள்ளது. அவைகளில் நேபாள், சைனா, ஆப்பிரிக்கா போன்ற நாட்டு கலைஞர்களை வைத்து இன்னமும் ஈடுகட்டி லாபம் இல்லாவிட்டாலும், கலைகளை நிகழ்த்தி காட்டி வருகின்றனர்.
அடுத்த தலைமுறைக்கு சர்க்கஸ் நேரடியாக பார்க்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! எனவே, பொதுமக்கள் ஆதரவு அளித்து அடுத்த தலைமுறையும் கண்டுகளிக்க வேண்டும், இதனால், உடல் பராமரிப்பு ஆராக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் இளைய தலைமுறைக்கு உணர்த்துகின்றனர்.