Girl dies of snake bite near Perambalur!
பெரம்பலூர் அருகே செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளி. இவரது மகள் சுபாஸ்ரீ (13). அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். கடந்த மே.19ம் தேதியன்று வீட்டிலிருந்த சிறுமி சுபாஸ்ரீ-யை அடையாளம் தெரியாத விஷப் பாம்பு கடித்துள்ளது.
அங்கிருந்தவர்கள் சிறுமியை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தினர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று சுபாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.