Girlfriend falls dead when bike stalls near Perambalur! Lover hurt!!
பெரம்பலூர் அருகே பைக்கில் சென்ற போது கீழே விழுந்த இளம்பெண் சிகிச்சையில் இன்று உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் எறைய சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் மணிகண்டன் (23)
திருச்சி மாவட்டம் மணப்பாறை கரிக்கான் குளத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் பிரியதர்ஷினி (23). இருவரும் நேற்று திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாடாலூர் அருகே உள்ள பெருமாள் மலை வந்த போது பைக் நிலைத்தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் பிரியதர்ஷினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது இன்று உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் மணிகண்டனும், பிரியதர்ஷினியும் நர்சிங் படித்துள்ளனர். இருவரும் காதலித்த நிலையில் இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடும் செய்த வந்துள்ளனர்.
இந்நிலையில், புதுமணத் தம்பதிகளாக வாழ்க்கையை தொடங்க இருந்த நிலையில் இளம்பெண் இறந்த இந்த துயர சம்பவம் காதலர்கள் வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.