Girlfriend Tarna infront of Boy boyfriend home; seeking to hold Marriage; Incident near Perambalur on Valentine’s Day!
பெரம்பலூர் அருகே உள்ளள பூலாம்பாடி கிராமத்தில், காதலித்த தன்னை கரம் பிடிக்க கோரி, காதலன் வீட்டு முன்பு பெண் டாக்டர் காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் முத்துக்குமார் (25), இவரது வீட்டு முன்பு நேற்றிரவு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், ஏரநாடு அருகே உள்ள எலையூர் கிராம்தை சேர்ந்தவர் ஹரிதாஸ் இவரது மகள் ஹரிப்பிரியா (25), திருமணம் செய்துக் கொள்ளக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், முத்துக்குமாரும், ஹரிப்பிரியாவும், கிருக்கிஸ்தான் நாட்டில் இருவரும் ஒன்றாக எம்.பி.பிஎஸ். படித்து உள்ளனர். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்து காதலித்து வந்தனர். பின்னர் இந்தியா திரும்பிய பின்னர் இருவரும் ஒன்றாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில், ஒரே வீட்டில் தங்கி கொண்டு அங்குள்ள சஞ்சீவன் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவரும் தீவிரமாக ஆழமாக ஒருவரை நேசித்து காதலித்து வந்த அவர்களுக்கு வீட்டில் எதிர்க்கிறார்கள் காரணம் காட்டி, முத்துக்குமார், ஹரிப்பிரியாவை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். அதனால், கேரளாவில் இருந்து நேராக காதலன் முத்துக்குமார் வீட்டிற்கு வந்த காதலி டாக்டர் ஹரிப்பிரியா காதலன் வீட்டு முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. முத்துக்குமாரின் பெற்றோர்களை அழைத்து உரிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து அரும்பாவூர் போலீசார், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் ஹரிபிரியாவிற்கு உரிய பாதுகாப்புகளை அளித்து வருகின்றனர். மேலும், தனி ஒரு பெண்ணாக காதலித்தவனை கரம் பிடிக்க தனியாக வந்து போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.