Communists who join hands with Congress in Tamil Nadu are opposed to Kerala. They are going to be a clown to cheat people! Talk to Vasan Perambalur!

பெரம்பலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணஜனாத்தனன் தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், வேட்பாளர் சிவபதி ஆகியோர் பேசினர்.

பின்னர், அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், அதிமுக தலைமையில் அமைந்துள்ளது ஒரு வெற்றிக் கூட்டணி. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி பெரும் சந்தர்ப்பவாத கூட்டணி.

இதற்கு ஒரு உதாரணம் கேரளாவில் போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை எப்படியாவது தோற்கடிக்கப் போவதாக அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சியினர் பகிரங்கமாக கூறி வருகின்றனர். அதே கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினருடன் அமர்ந்து வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கின்றனர். இவர்களால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாறவும் மாட்டார்கள்.

எதிர்கட்சிகள் தமிழக மக்களை ஏமாளியாக்க ஆக்கவேண்டும் என நினைத்தீர்ரகளானால் நீங்கள் தான் கோமாளியாக மாறிவிடுவீர்கள். தமிழக மக்கள் புத்திசாலிகள். மதவாதம் எனும் வார்த்தையை எதிர்கட்சியினர் உச்சரிக்காதபடி தமிழக மக்கள் அந்த அணியினருக்கு வரும் தேர்தலில் தீர்ப்பு வழங்குவார்கள். சிறுபான்மையினர் நலன் பற்றி பேசும் காங்கிரஸ் கட்சி தற்போது நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட சிறுபான்மையினர் ஒருவருக்கு கூட சீட் வழங்காதது ஏன்?

தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லவும், 100 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை கொண்டுவரவும் வேண்டும் என்றால் எல்லோராலும் எளிமையாக அனுகக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோரால் மட்டுமே முடியும்.

தமிழகத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்து உள்ளது. ஏழை பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் உட்பட பெண்களுக்கு என 100% திட்டங்கள் கொடுத்த ஆட்சி அதிமுக தான்.

மத்திய அரசு மிகச் சரியாக திட்டங்களை செய்து வருகின்றது, சாதாரன மக்களுடைய என்னங்களை பிரதிபலிப்பவர் எடப்பாடி. ஏழை ,எளிய , நடுத்தர மக்கள் வளர்சியடைய வேண்டும் என்றால் மத்தியில் மோடி அரசு அமைய வேண்டும். பணத்திற்கு மக்கள் ஒரு போதும் அடிமையாக மாட்டார்கள்.

மக்களாகிய நீங்கள் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். உங்களுக்கான நலத்திட்டங்களை வாதாடி, போராடி பெற்றுத் தரும் வல்லமை மிக்க வேட்பாளர் சிவபதிக்கு வாக்களியுங்கள். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சிவபதி தமிழகத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

கூட்டத்தில் பாமக மாநில துணைபொதுசெயலாளர் வைத்தி, தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதிமுக நகர செயலாளர் ராஜபூபதி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!