Global Investors Conference on 7th and 8th January in Chennai: Minister TRB Raja informs
பெரம்பலூர் மாவட்டம்,எறையூர் சிப்காட்டில் காலணி தொழிற்சாலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதே போன்று தமிழகம் எங்கும் நிறுவனங்கள் அமைய உள்ளன. இந்த காலனி தொழிற்சாலையில் முதற்கட்டமாக 400 கோடி மதிப்பீட்டில் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டவுள்ளது. இதனை தொடர்ந்து 2,500 கோடி மதிப்பீட்டில் தொழிற்சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இதே போல் தமிழகம் எங்கும் புட் வேர் பாலிசி(காலனி பூங்கா) அமைய உள்ளது. பின்தங்கிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் இது போல் தொழில்சாலை அமைய உள்ளன. வருகின்ற ஜனவரி 7,8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைப்பெற உள்ளது.
அப்போது பல லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளது. போக்குவரத்திற்காக மேலும் தஞ்சாவூர் விமான நிலையம் விரிவாக்கப்பட உள்ளது . இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெரும் என தெரிவித்தார்.