Gokulraj murder case trial adjourned on Feb.1
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரனையை வரும் பிப்.1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இதையடுத்து, கோகுல்ராஜ் தாய் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன், கல்லூரி தோழி சுவாதி, அவரது தாய் செல்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண் உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அரசுத்தரப்பு சாட்சியான திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் என்பவரிடம் யுவராஜ் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப். 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.