Gold chain snatched from a woman walking in Perambalur!

கற்பனை காட்சி

பெரம்பலூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் 6 பவுன் தங்கசெயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் 4 ரோடு அடுத்த தில்லை நகரை சேர்ந்த ராஜு மனைவி பழனியம்மாள் (60). நேற்றிரவு 8 மணி அளவில், பெரம்பலூர் நகருக்கு வந்துவிட்டு, மினிபஸ்சில் இறங்கி அவரது வீட்டிற்கு தில்லை நகர் அருகே உள்ள மெயின் ரோட்டில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து செயினை பறிக்க முயன்றார்.

விளம்பரம்:

பழனியம்மாளும், அவனின் சட்டையை பிடித்து இழுத்து உள்ளார் அந்த மர்ம நபர் பெண் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு பெண்ணை தள்ளிவிட்டு அரியலூர் சாலையை நோக்கி ஓடி தப்பித்து மறைந்தான். பழனியம்மாளும், பின் தொடர்ந்து கத்திக்கொண்டே பின் தொடர்ந்து ஓடியும் பிடிக்க முயடிவில்லை.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்த்திற்கு சென்ற போலீசார் பெரம்பலூர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!