Good Samaritan who helps in road accident, reward increased to Rs. 10 thousand: Perambalur Police SP S. Shyamla Devi information!
பெரம்பலூர்: சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு முதலில் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி உயிரை காப்பாற்ற உதவியாக இருக்கும் நற்கருணை வீரருக்கு (GOOD SAMARITAN) ரூ 5000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அத்தொகை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும்,
அத்தகைய உதவி செய்யும் நற்கருணை வீரருக்கு அத்தொகையினை பெறுவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அரசுக்கு சிபாரிசு செய்யப்படும் என்பதையும்,
மேலும் அவரை, வழக்கு சம்பந்தமாக காவல் துறையினர் எந்தவித தொந்தரவும் செய்யமாட்டார்கள் என்றும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.