Goondas act on the Lawyer who alleged sexual abuse over Perambalur ruling party

பெரம்பலூரில் அதிமுக முக்கிய பிரமுகர் பாலியில் அத்து மீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்த வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிருக்கும் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான ப.அருளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எஸ்.பி.,திஷாமிட்டல் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடந்த 3ந்தேதி பெரம்பலூர் கூடுதல் மகிளா நீதி மன்றம் ப.அருளை ஜாமீனில் விடுவித்தது, இதனிடையே பாலியியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடன் பேசுவது போன்ற ஆடியோ வெளியிட்ட வழக்கில், வழக்கறிஞர் ப.அருள் மீண்டும் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 6 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் ப.அருளுக்கு கூடுதல் மகிளா நீதி மன்றம் இன்று ஜாமீன் வழங்கிய நிலையில், வழக்கறிஞர் ப.அருளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு ஆணையை பெரம்பலூர் போலீசார் சற்றுமுன் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!