Government bus collision kills 10-year-old boy! The bus drove away without stopping civilians hostage.
பெரம்பலூர் அருகே அரசு பேருந்து மோதியதில் மாணவன் பலி : நிற்காமல் சென்ற ஓடிய பேருந்தை பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சென்று விரட்டி பிடித்தனர். தப்பித்து ஓடிய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
பெரம்பலூர் துறைமங்கலம், ரோஜா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது இளையமகன் கவிராஜ் (வயது 10) 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக இன்று மாலை துறைமங்கலத்தில் உள்ள சாலையை கடக்க நின்றுள்ளார்.
அப்போது காஞ்சிபுரம் பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சிறுவன் கவிராஜ் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான், உடனே பேருந்து ஓட்டி வந்த ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பி சென்றார். இதை கவனித்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் விரட்டிச் சென்று சிறுவாச்சூர் மடக்கி பிடித்தனர்.
பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மற்றும், நடத்துனர் தப்பித்து தலைமறைவாகினர். இது குறித்து தகவல் அறிந்த இப்பபகுதி மக்கள் பெரம்பலூர் திருச்சி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறுவனை பலியாக்கி விட்டு அரசு பேருந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.