Government bus not to provide compensation for injury confiscation bus crash
அரசு பேருந்து மோதிய விபத்தில் காயமானவருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை பெரம்பலூர் நீதிமன்றம் ஜப்தி
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகே உள்ள இளைபெருமாள்நல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் தேதி அவருடைய நண்பர் கொடியரசனுடள் மோட்டார் சைக்கிளில் புதுச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் கொடியரசன் உயிரிழந்தார். இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார். இது குறித்து சுரேஷ் பெரம்பலூர் நீதிமன்றத்தில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1லட்சத்து 41 ஆயிரம் இழப்பபீடு வழங்க திருச்சி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்திரவிட்டது.
ஆனால், இழப்பீட்டு தொகை வழங்காமல் அரசு போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தி வந்தது. ,பாதிக்கப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்ககல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 421 வழங்க உத்திரவிட்டு திருச்சி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டது.
உத்திரவின் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த திருச்சி அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.