Government bus to provide compensation to the victims of the confiscation : court attached the bus

விபத்தில் இறந்தவருக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் பெரம்பலூர் நீதிமன்றம் உத்திரவின் பேரில் இன்று அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் முத்துக்குமார் (வயது 35). ஜோதிடரான இவர், கடந்த 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி சத்திரமனையில் இருந்து நண்பரின் வாகனத்தில் பொம்மனப்பாடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் ஜோதிடர் முத்துக்குமார் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து 2013 ஆம் ஆண்டு பிப்.19ம் தேதியன்று முத்துக்குமாரின் தாய் மாணிக்கம்மாள் (வயது 70), அவரது சகோதரி தமிழ்ச்செல்வி (வயது 42) ஆகியோர் இழப்பீடு கோரி பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8லட்சத்து 42 ஆயிரம் திருச்சியை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க உத்திரவிட்டது.
இதனை திருச்சி கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை பரிசீலனை செய்து குறைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் வழங்கி தீர்ப்பு இழப்பீட்டு தொகை வழங்க உத்திரவிட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி பாதிக்கப்பட்ட முத்துகுமாரின் குடும்பத்தினர் நிறைவேற்று மனுவை பெரம்பலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி கோட்டம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து 11 லட்சத்து 7 ஆயிரத்து 212 ரூபாய் வழங்க உத்திரவிட்டது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு உத்திரவின் பேரில் திருச்சி விழுப்புரம் செல்லும் பேருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த போது கோர்ட் அமீனாக்கள் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் உரிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!