Government employees and teachers demonstrated on behalf of Jacotto-Geo in Perambalur
பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2017 ஆண்டு முதல் தொடர்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர். ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாத காரணத்தால் போராட்டத்தின் முதற்கட்டமாக 4.10.2018 அன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த அறிவித்ததையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், பஙகளிப்பு திட்டத்திதை ரத்து செய்து விட்டு புதிய ஓய்யூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், இடைநிலை முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதிய முரண்பாடு களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோர் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டது.