Government employees and teachers near Perambalur disappointed Argue with election officials!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் தபால் ஓட்டு கிடைக்காத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 30 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் நடந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேர்தல் அன்று வாக்களிக்க முடியாது என்பதால்ல் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், தேர்தல் பணியில் ஈடுபட்ட பல அலுவலர்களுக்கு இதுவரை தபால் ஓட்டுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதால், தபால் ஓட்டுகள் கிடைக்காத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்று வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அலுவலகத்தில் தபால் ஓட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் பேச்சு வார்த்தை நடத்தி அலுவலகத்திலிருந்து வெளியேற்றினர். இதனால் தபால் ஓட்டு போட முடியாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் பயிற்சி நிறைவடையும் முன்னதாகவே, தேர்தல் பணிக்கு செல்லும், ஆசிரியர்கள் மற்றும் பி ஊழியர்கள் வாக்குச் சீட்டை உரிய நேரத்தில், முறையாக கேட்டுப் பெறவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!