Government employees demonstrated in Perambalur || பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.