Government employees perambalur district collector’s office waiting for the 2nd day of strike

file


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று 2வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.

இன்று 8-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிக்கிறது. மேலும், நேற்று முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் கலந்து கொண்டவர்களைபோலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் இன்று மீண்டும், 2வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 50 பெண்கள் உள்பட சுமார் 200 பேர் பங்கேற்றுள்ளனர். போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!