Government flats falling Spill near Perambalur; Collector visited !
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில், தமிழ்நாடு குடிசைப்பகுதிமாற்று வாரிய குடியியருப்புகளை பொதுமக்ககள் தெரிவித்த புகாரின் பேரில் கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்ட அவர், குடியிருப்புவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழை,எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுள்பாளையம் ஊராட்சியில் நான்கு பகுதிகளுடன்கூடிய 504 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது 440 பயனாளிகள் வசித்து வருகின்றனர். இந்தக்குடியிருப்புகள் தரைத்தளத்துடன் கூடிய இரண்டடுக்கு மாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளது. 09.06.2018 அன்று துவங்கப்பட்ட இக்கட்டடப்பணிகள் 31.01.2020 அன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக்குடியிருப்புகளின் சில பகுதிகளில் பூச்சுகள் பெயர்ந்துள்ளதாகவும், வீடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினர் உடனடியாக குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கவுள்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில குடியிருப்புகளில் ஆங்காங்கே சிறிய அளவில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளதையும், படிக்கட்டுகளில் பூச்சுகள் பெயர்ந்துள்ளதையும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் சுவற்றின் வெளிப்புறப்பூச்சுகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும், குடியிருப்பு கட்டடங்கள் உறுதியாக இருப்பதாகவும் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் யாரும் இதுகுறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை, குடியிருப்புவாசிகளின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றித்தரப்படும்.
குடியிருப்பு குறித்த புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில், இங்கேயே அலுவலகம் ஒன்றை அமைத்து, இங்கு குடியேறியுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைகளை கேட்டறிந்து வீடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்திடும் வகையில் உதவிபொறியாளர் தலைமையிலான குழுவினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் பிளாக் பகுதியில் உள்ள 8-ஆம் எண் வீட்டில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
குடியிருப்புவாசிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக ஒரு அலைபேசி எண்ணை தெரிவித்து, அந்த அலைபேசிக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குடியிருப்புவாசிகள் தங்கள் புகார்களை 97903-82387 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உதவிசெயற்பொறியாளரிடம் தெரிவிக்கலாம். குறைபாடுகள் உள்ளதாக கருதப்படும் அனைத்து வீடுகளும் முழுமையாக சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றும், குடியிருப்போர் அனைவரும் தங்கள் வீடுகளில் எந்த குறைகளும் இல்லை என்று தெரிவிக்கும் வகையில் வீடுகளை சரிசெய்திட தேவையான உரிய நடவடிக்கைகளை உடனடிகா மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வப்போது இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்வேன் என்றும், பொதுமக்கள் எந்தஒரு குறைகளும் தெரிவிக்காத வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. அனைத்து குறைகளும் முழுமையாக நிவர்த்தி செய்தபிறகே ஒப்பந்தகார்ருக்கான நிலுவைத்தொகை ரூ.2 கோடி விடுவிக்கப்படும், என தெரிவித்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மேலும், தரமற்ற கட்டிடத்தை குடியிருக்க, ஒப்பந்ததாரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.