Government Medical Insurance Scheme Cards are issued only through the Collector’s Office: Perambalur Collector Sri Vengada Priya Information

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்டபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டை இருப்பிடமாக கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய, ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவ உயர்சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் ஆகிய இணைந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டைகள் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காப்பீடு அட்டை பெற்றவர்கள் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக சில தனி நபர்கள் போலியான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குவதாக அரசுக்கு புகார்கள் வரப்பெற்றுள்ளன. மேற்படி, மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குவதற்கு தனி நபர்களுக்கு அரசால் அதிகாரம் ஏதும் வழங்கப்படவில்லை.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் போலி மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் தனி நபர்கள் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதாக கூறி அணுகினால் அதனை நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து பொதுமக்கள் ஏதேனும் புகார் தொpவிக்க விரும்பினால் 18004253993 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!