Government of Tamil Nadu Arts Teacher Association’s request to publish the announcement of the selection of Arts and technology exam

தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க செயலாளர் மதுரம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :

இயல், இசை, ஓவியம், விவசாயம் போன்ற பயிற்சிகளைப் பெற்றவர்கள், தனித்தேர்வர்களாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கத்தால் நடத்தப்படும் தொழில்நுட்பத் தேர்வுகள் எழுதி பொதுத்துறை, தனியார் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர, பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர், தங்கள் கைத்தொழில் திறன்களை வெளிப்படுத்தி அங்கீகாரம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்தாண்டு இதுவரை வெளியிடவில்லை. கடந்த சில, ஆண்டுகளாக காலம் தாழ்ந்து நடந்து வருகிறது.

சில ஆண்டுகள் நடக்கவில்லை. 2013 ம் ஆண்டில் நவம்பரில் நடக்க வேண்டிய தேர்வு 2014 ல் நடைபெற்றது. அதேபோல் 2015 ல் மே மாதம் நடக்க வேண்டிய தேர்வு நவம்பரிலும், 2016ல் தேர்வு நடக்கப்படவில்லை.

இந்த தேர்வு 2017 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்தாண்டில் 2018 முடிவுறும் நிலையில் இத்தேர்வு அறிவிப்புக்கூட இன்னும் வெளியாகவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 2012 ம் ஆண்டு வரை 90 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து, பல்லாயிரக்கணக்கான கலை மற்றும் கைவினைக் கலைஞர்களை உருவாக்கிய அரசு தொழில் நுட்பத்தேர்வுகள் 2013 ம் ஆண்டுக்கு பின்னர் சில ஆண்டுகள் நடத்தப்படவில்லை.

அரசு தொழில் நுட்பத் தேர்வுகளை வரும் காலங்களில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில் தொடர்ச்சியாக நடக்க ஆவண செய்வதுடன் வரும் 2019ல் துவக்கத்திலேயே இந்த தேர்வை நடத்த ஆவண செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!