Government school students exchange program in the near Namakkal
நாமக்கல் மாவட்டம் வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளி பரிமாற்றத் திட்டத்தின்கீழ் மொளசி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர்.
நிகழ்ச்சிக்கு கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சாதனா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தழிழரசி, ஆசிரியப் பயிற்றுனர் ராமேஸ்வரி ஆகியோர் பேசினார்கள்.
இரு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கணிதத்தில் இயற்கணிதம் மற்றும் வரைபடங்கள் கற்பிக்கப்பட்டது. கலை மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் வழிக் கல்வியும், வீடியோ படக்காட்சி மூலமும் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பள்ளி கணித ஆசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.