Government subsidy for farmers cultivating vegetables naturally: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தோட்டக் கலைத் துறையின் மூலமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. காய்கறி பயிற்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750- மற்றும் கீரை வகைகளுக்கு ரூ.2,500- ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ஒரு விவசாயிக்கு அதிகப்பட்சமாக இரண்டு ஹெக்டர்வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். இதுதவிர இயற்கை விவசாய சான்று பெறுவதற்கு ரூ.500- வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் தனியாகவும் அல்லது விவசாய குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறுவதுடன் நல்ல லாபம் ஈட்ட முடியும் மற்றும் வெளியாட்டு ஏற்மதிக்கான வாய்ப்புகளையும் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை நேரடியாகவோ அல்லது ஆலத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை 88384 48116 என்ற கைப்பேசி எண்ணிலும், பெரம்பலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை 97863 77886 என்ற கைப்பேசி எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை 63792 46587 என்ற கைப்பேசி எண்ணிலும், வேப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை 63830 62564 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!