Government work on contract basis in One Stop Centre : Perambalur Collector Inform!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் “சகி” One Stop Centre (OSC) திட்டம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பணிபுரிய பெரம்பலூர் மாவட்டத்தில் நிரந்தர முகவரியைக் கொண்ட கீழ்கண்ட நிலைகளில் தகுதி பெற்ற பெண் நபர்களினை ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 10.01.2022-ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

வாக்கு பணியாளர் (Case Worker – 4 Nos.) சமூக பணி சார்ந்த துறையில் இளங்கலைப்பட்டம் (Bachlors Degree in Social Work) பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த திட்டங்களில், அத்திட்டத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாத சம்பளம் ரூ.15,000- வழங்கப்படும்.

பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper-1 No.) விண்ணப்பதாரர் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமைக்க தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேர சேவை வழங்க அவர் (பகல் மற்றும் இரவு) ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும். மாத சம்பளம் ரூ.6,400- வழங்கப்படும்.

பாதுகாப்பு காவலர் (Security Guard-1 No)விண்ணப்பதாரர் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமைக்க தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேர சேவை வழங்க அவர் (பகல் மற்றும் இரவு) ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும். மாத சம்பளம் ரூ.10,000- வழங்கப்படும்.

மேற்கண்ட தகுதியினை உடையவர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 10.01.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மேற்படி அலுவலகத்தினை நேரில் அணுகி தெரிந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!