Governmentp polytecnic College lecturer Exam : Tomorrow is going : perambalur
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 3,793 நபர்கள் ரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வை எழுதுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் நாளை (16.09.2017) நடத்தப்பட உள்ள அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறும் விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் 16ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் எழுத்துத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 30 மாற்றுத் திறனாளிகள் உட்பட 3,793 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மையத்திற்கு ஒருவர் வீதம் 11 முதன்மை கண்காணிப்பாளர்கள், 11 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 11 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
11 கூடுதல் துறை அலுவலர்கள், 39 சோதனை அலுவலர்கள், 193 அறை கண்காணிப்பாளர்கள், பிற பணிகளை மேற்கொள்ள 77 நபர்கள் மற்றும் காவல் பணிகளில் 22 நபர்கள் என மொத்தம் 375 நபர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு முடியும் வரை அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையின்றி மின் விநியோகம் மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு மையங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா என்று நகராட்சி ஆணையர் கண்காணித்து போதிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
காவல் துறையினர் போதிய காவலர்களைக் கொண்டு பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வதுடன் தீயணைப்புத் துறையினர் தேர்வு மையங்களில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான போட்டித் தேர்வினை எவ்வித குறைபாடுகளும் இன்றி சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலர் பிரிதிவிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.