பெரம்பலூரில் இயங்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்தை பூர்த்தி செய்திட புதிய சுழற்சிமுறை அரசாணைப்படி இன சுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அலுவலக உதவியாளர் பதவிக்கான ஊதிய விகிதம் 4800-10,000+ 1300 (தரஊதியம்) ஆகும்.
அலுவலக உதவியாளர் பணியிடம் பொது முன்னுரிpமை (GL General Turn Priority) இனசுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். வயது வரம்பு அரசு நிர்ணயித்தபடி கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்களது கல்வித்தகுதி குறித்த விபரத்துடன் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தண்ணீர்பந்தல் (ரோவர் கலைக் கல்லூரி பின்புறம்) பெரம்பலூர் 621220 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் மார்ச்.04 ஆகும். இதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். என முதல்வர் ப.மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார்.