Govt Liquor in residential area near Perambalur: Public protest closed down!
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில், குடியிருப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுக்கடை இயங்கி வருகிறது. இரவு – பகலாக இங்கு வரும் மதுப்பிரியர்கள், அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் பல முறை தொடர் போராட்டம் நடத்தியதால், கடையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுக்கடை தொடர்ந்து அங்கேயே இயங்கி வந்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் போராட்டத்தில், மதுகடைக்கு முன்பாக ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பேச்சு நடத்தினர். பின்னர், கடையை மூடுவதாக அறிவித்து கடையின் முன்பு கடை மூடப்பட்டதா அறிவிப்பும் செய்தனர். பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பகுதி மக்கள் கடை மூடப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.