Gramma shaba meeting on 121 panchayats on Republic Day in Perambalur District: Collector V. Shantha information.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜன.26 அன்று 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசித்தல் வேண்டும். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.
அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். 26.01.2020 குடியரசு தினத்தன்று கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அவர்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும்.
கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கி.ஊ) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜன.26. அன்று கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தரவேண்டும், என தெரிவித்துள்ளார்.