Group – 2A Exam Perambalur wrote 5,680 people: Collector Information
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் – 2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு நடைபெற்ற மையங்களில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பொறியில் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குரூப் – 2ஏ தேர்விற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 7,587 பேர் விண்ணப்பித்திருந்தததாகவும்,. இதில் 5,680 நபர்கள் இன்றைய தேர்வில் பங்கேற்றதாகவும், 1,907 பேர் தேர்விற்கு வரவில்லை என்றும், இந்த தேர்வினை சிறப்பாக நடத்தும் வகையில் 26 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 6 பறக்கும் படைகள் மற்றும் 6 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும்,
தேர்வு மையங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தேர்வு எழுதும் நபர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து மையங்களிலும் மேற்கொள்ளப்பட்டு நல்ல முறையில் தேர்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.