GST should be eased for construction industry; Tamil Nadu Construction Workers Welfare Board Chairman Pon. Kumar interviewed in Perambalur!
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு (CRIC) சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்.குமார் தலைமையில் பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 60 கல் குவாரிகளின் ஏலம் நடத்தி கட்டுமான பொருள்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும்,
பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியினை விரைந்து தொடங்க ஆவண செய்யவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் அலுவலக கட்டிடங்கள் டிடீசிபி அலுவலகம், கூடுதல் ஆட்சியர் அலுவலகம், மற்றும் வேப்பந்தட்டை நீதிமன்ற கட்டிடம், குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற பணிகளை உடனடியாக தொடங்கவும், 2024 க்கான பெரம்பலூர் மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளானை வெளியிடவும்,
பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் அதிக அளவில் கட்டிட அனுமதிக்கான கோப்புகள் மற்றும் மனை வரன்முறைப்படுத்தும் கோப்புகள் நிலுவையில் உள்ளதை, அதனை சரிபார்த்து விரைந்து ஒப்புதல் அளித்திட உரிய நடவடிக்கைவும், கட்டுமானப் பொறியாளர் மற்றும் தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திட மற்றும் ஆய்வகம் அமைத்திட பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் அளவிற்கு அரசு நிலம் ஒதுக்கி கொடுக்க வேண்டியும்,
கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது இணையத்தில் கட்டிட வகை கேட்கப்படுகிறது. அதாவது தொடர் கட்டிடம் பகுதியா? பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியா? மலைப்பகுதியா? இதர பகுதியா? என்ற தகவல்கள் கேட்கப்படுகிறது. இதுவரை அரசு சார்பில் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இடங்களை இதுபோன்று வகைப்படுத்தப்படாமல் உள்ளதால் அகலம் குறைவாக உள்ள கடைவீதி பகுதிகளிலும், மொத்த பரப்பளவு குறைவாக உள்ள பொருளாதார பின்தங்கிய பகுதியிலும் தகுந்த முறையில் அனுமதி பெற முடியாமல் இதர பகுதியாகவே கட்டிட அனுமதி பெற முடிகிறது. இதனால் சிறிய அளவிலான கட்டிடங்கள் அனுமதி பெறப்படாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். விரைவில் முறைப்படுத்தி கொடுக்கவும்,
நகர் மற்றும் ஊரமைப்புத்துறையில் கட்டிட அனுமதி, புதிய மனைப்பிரிவு அனுமதி, தனிமனை (Single Plot) வரன்முறைக்கு உண்டான ஒப்புதல் கடிதம் வழங்குதல் மற்றும் 20.10.2016க்கு முன் போடப்பட்ட மனைப்பிரிவுகளை (Layout) வரன்முறைப்படுத்துதல் கோப்புகள் அனுமதி வழங்கிட காலதாமதம் செய்யாமல், அனைத்து கோப்புகளையும் விரைந்து முடித்து கொடுக்க வேண்டும் என்றும், தற்போது சமீபத்தில் கட்டுமான மூலப்பொருட்கள் 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு, அரசு ஒப்பந்த பணிகளுக்கு செட்டியூல் ஆப் ரேட்டை 30 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், செய்தியளார்களிடம், அச்சங்கத்தின் மாநில தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்.குமார் தெரிவித்ததாவது: மத்திய அரசு, ஜி.எஸ்.டி வரியை கட்டுமான தொழிலுக்கு தளர்த்த வேண்டும், மத்தியிலும், மாநிலத்திலும், தனி அமைச்சகம் வேண்டும், ஜி.எஸ்.டி வரியை உத்திரபிரதேசத்திற்கு வழங்குவது போல், தமிழகத்திற்கும் வழங்க வேண்டும், என தெரிவித்தார். மாநில இணைச் செயலாளர் பி.சிவக்குமார், மண்டலத் தலைவர் சி.ராஜாராம், மாவட்டத் தலைவர் கே.பாலமுருகன், மாவட்ட செயலாளர் என்.செந்தில்குமார், மாவட்ட பொருளார் பி.விஜயபாபு , மாநில செயலாளர் எஸ். யுவராஜ், மாநில பொருளாளர் எஸ். ஜெகதீசன், மற்றும் பெரம்பலூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் என்.செந்தில்குமார், செயலாளர்கள் ஆர்.எம்.கே கார்த்திக்ராஜா, ஆர்.கிரிபிரசாத், பொருளாளர் ராமன், பெரம்பலூர் மாவட்ட கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் பி.சிவக்குமார், செயலாளர் வி.ராஜசேகர், பொருளாளர் ஆர்.பி. சுப்பிரமணியன், இணைச் செயலாளர் ஆர்.கிரிபிரசாத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், பொறியாளர்கள், கட்டுமான ஒப்பந்தாரர்கள், கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, துப்புறவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.