Guard Salute Day; At Perambalur, Collector S.P. paid floral tributes.

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணிற்கு கலெக்டர் கற்பகம், போலீஸ் எஸ்.பி ஷியாமளாதேவி ஆகியோர் இன்று காலை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

உயிர்நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு எஸ்.பி உறுதி மொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அக்டோபர் 21ம் நாள், ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

1959ம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் Hot Springs என்ற இடத்தில், சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து பதினாறாயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, நாம் இன்று நினைவு கூர்கிறோம்.

கடற்கரையானாலும் பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைக் காப்பதற்காக உயிர்நீத்த காவலர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம். அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம்.” என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

டி.ஆர்.ஓ மு.வடிவேல்பிரபு, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.டி.மதியழகன், வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி துணை காவல் கண் காணிப்பாளளர்கள் வளவன், தங்கவேல், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், மண்டல ஊர்க்காவல் படை தளபதி அரவிந்தன் உள்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!