Hand made Country gun in farmer’s field near Perambalur; Police interrogated father and son!

பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில், தங்கமணி என்பவரின் விவசாய நிலத்தில் போடப்பட்டுள்ள வைக்கோல் போரில், நாட்டுத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, அவரது மகன் ரத்தினகிரி(36), என்பவர் கொடுத்த தகவலின் பேரில், SBML ரக நாட்டு துப்பாக்கியை பெரம்பலூர் போலீசார் பறிமுதல் செய்து, தங்கமணி மற்றும் அவரது மகன் ரத்தினகிரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைக்கோல் போரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, நாட்டுத் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த துப்பாக்கி, பச்சை மலையில் வேட்டையில் ஈடுபடும் எவரேனும் வைத்துவிட்டு சென்றுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!