Having trouble buying and selling vegetables in the curfew? Help numbers! Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்டபிரியா விடுத்தள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை வேளாண்மைத் துறை மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்திட, பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 24.05.2021 முதல் 31.05.2021 வரை ஒருவார காலத்திற்கு தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழவகைகள் வேன்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரி செய்வதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

கட்டுப்பாட்டு அறையானது காலை 8.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை செயல்படும். வேளாண்மை இடுபொருள் தொடர்பான குறைகளுக்கு
வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு (சண்முகசுந்தரம்) 96777 99938 என்ற எண்ணிலும், தோட்டக்கலை இடுபொருட்கள் மற்றும் விளை பொருட்கள் தொடர்பான குறைகளுக்கு தோட்டக்கலை அலுவலர் (கனிமொழி) 97151 67612 என்ற எண்ணிலும் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வது மற்றும் கொண்டு செல்வது தொடர்பான விளக்கங்களுக்கு வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் (நாகராஜன்) என்ற அலுவலரை 99423 81099 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, தங்களுக்குத் தேவையான சேவைகளை பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!