பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் 2016ஆம் ஆண்டிற்கானபட்டமளிப்பு விழா 12-03-2016 சனிக்கிழமையன்று காலை 11.00 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம், பாலக்கரை அருகிலுள்ள ஜே.கே. மஹாலில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.மா.முத்துக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக்க் கலந்துகொண்டு 1152 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.
பட்டம் பெறுவதற்குத் தயாராகும் விதமாக மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சி நடைபெறும் 12-03-2016 அன்று காலை 8.00 மணிக்குள் ஜே.கே.மஹால் வளாகத்தில் நடைபெறும் பெயர்ப்பதிவு மற்றும் ஒத்திகை நிகழ்விற்கு தவறாது வருகை தரவேண்டும்.
அனைத்து மாணவ, மாணவிகளும் தவறாது கலந்துகொண்டு பட்டச் சான்றிதழ்களை பெற்றுச்செல்ல வேண்டும், என கல்லூரியின் முதல்வர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.