He did not join politics to earn like DMK; I am here to serve you! Speech in Parivendar vote collection campaign!
பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குணம், சிறுவாச்சூர், வேலூர், அம்மாபாளையம், குரும்பலூர், செஞ்சேரி எசனை பகுதிகளில் இன்று பாஜக கூட்டணியில் போட்டியிடும், ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் தனது கூட்டணி கட்சியினருடன் வாக்குகள் சேகரித்தார். செங்குணம் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த பாரிவேந்தருக்கு, அக்கிராம மக்கள் வழிநெடுக நின்று ஆயிரக்கணக்கான பெண்கள் பூமழை தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது கூட்டத்தில் பாரிவேந்தர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் என்னை (பாரிவேந்தர்) 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தீர்கள். நான் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலனவற்றை நிறைவேற்றி உள்ளேன். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே செய்த பணிகளை புத்தகமாக வெளியிட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர் என்னை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
அரசியலுக்கு சம்பாதிக்க நான் வரவில்லை, உங்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்; ஆல யம்பதி னாயிரம் நாட்டல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல் என்பதற்கு ஏற்ப பெரம்பலூர் மாவட்டத்தில் 1500 ஏழை எளிய மாணவர்களை ரூ. 118 கோடி செலவில் படிக்க வைத்துள்ளேன். அதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. புண்ணியம் அடைந்ததாக கருகிறேன்.
தமிழ்நாட்டில் ஊழல் செய்ய கட்சிகள் இல்லை. ஊழல்வாதிகளாகவே உள்ளனர். குறிப்பாக திமுகவினர் சிறைக்கு சென்று வருகின்றனர். ஊழல்வாதிகளான அவர்களை டெல்லிக்கு அனுப்பில் தமிழ்நாட்டில் செய்வதை போலவே அங்கேயும் ஊழல் செய்வார்கள். அவர்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டாம். மீண்டும் எனக்கு தாமரை சின்னத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்றும், உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கு ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆண்டு ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான உயர் மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்.
எனவே மக்களுக்காக தனது, சொந்த பணத்தை செலவு செய்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நான் மக்களுக்கு கொடுக்க வந்து இருக்கிறேன். மக்களிடத்தில் வாங்க வரவில்லை. வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளர் யார் என நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
நான் ஒரு ரூபாய் செலவு செய்தாலும் என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறேன். ஆனால் மற்றவர்கள் உங்கள் வரிப் பணத்தை எடுத்து உங்களுக்கு செலவு செய்கிறார்கள் என்றும், எனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அனைத்து நிதியையும் தொகுதிக்கு கொண்டு வந்து மக்களுக்கும், பள்ளி கட்டங்கள் கட்டவும், 100 சதவீதம் செய்துள்ளேன். என்றும்,
பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மேலும் 70 அமைச்சர்கள் உள்ள மோடி அமைச்சரவையில் ஒருவர் கூட ஊழல் செய்யவில்லை . ஆனால் தமிழகத்தில் ஊழல் செய்யாத அமைச்சர்களே இல்லை. எனவே ஊழல் வாதிகளுக்கு ஆதரவளிக்காமல் மக்களுக்காக உழைக்கும் எனக்கு ஓட்டுபோட வேண்டும். நான் சம்பாதிப்பற்காக தேர்தலில் நிற்கவில்லை, மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் நிற்கிறேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டுபோட்டு என்னை வெற்றிபெற செய்யவேண்டும் என பேசினார்.
மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்யநாதன், மாநில விளம்பர பிரிவு பொறுப்பாளர் முத்தமிழ்செல்வன், வக்கீல் அன்புதுரை, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், அமமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.சி.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.