“Healthy Pongal and Equality Pongal” Festival at Elambalur Samatthupuram! Perambalur Collector Venkatapriya presided!!

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் சமத்துவபுரத்தில் ‘சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல்” விழா கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சி நிறுவன கூடுதல் இயக்குநர், தெய்வநாயகி முன்னிலையில் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையரின் அறிவுரைகளின்படி, தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத்திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக நடைபெறுவதை தொடர்ந்து, இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளிலும் பொங்கல் திருவிழாவானது ”சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல்” என்ற வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமத்துவ பொங்கல் விழாவில் பல்வேறு சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமுதாயம் சார்ந்த அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், பேச்சு மற்றும் கோலப்போட்டிகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்.

சமத்துவம் மற்றும் சகோதரத்தை வலியுறுத்தும் வகையில், ஒருங்கிணைந்து அனைவரும் செயல்படவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் சமத்துவ பொங்கல் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அதனை பின்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொங்கல் வாழ்த்து மடலை கலெக்டர் வெங்கடபிரியா மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி முகமை) அ.லலிதா, (மகளிர் திட்டம்) கருப்புசாமி, பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கணபதி, எளம்பலூர் ஊராட்சித் தலைவர் சித்ராதேவிகுமார் , முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் கே.சி.ஆர் குமார் (எளம்பலூர்), சரோஜா (எசனை) உட்பட அரசுத் துறை அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!