Heard, sewing machine; Got a chance to study in college! Woman happy with ministerial action !!
அரியலூர் மாவட்டம், செந்துறை ராயல்சிட்டி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் சந்திரா என்பவர் தமது வாழ்வாதாரத்திற்காக
தையல் எந்திரம் உதவி கேட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் மனு கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட அவர், அந்த பெண்ணிடம் நீ எதுவரையில் படித்திருக்கிறாய் அம்மா என கேட்ட போது, அவர் தான் 12ம் வகுப்பு வரை படித்து இருப்பதாக தெரிவித்தார். அமைச்சர் அந்த பெண்ணிடம், மேற்க்கொண்டு படிக்கிறாயா! என கேட்டபோது படிக்கிறேன் சார்!! என தெரிவித்த பெண்ணிடம் , உன்னை கல்லூரியில் சேர்த்து நானே படிக்க வைக்கிறேன், உறுதி அளித்ததோடு, மனுவில் கேட்ட தையல் மிஷின் உனது இல்லத்திற்கு கூடிய விரைவில் வந்து சேரும் என்றும் உறுதி அளித்தார். நன்றி தெரிவித்த அந்த பெண் , கேட்டதோ தையல் மிசின், கிடைத்ததோ, கல்லூரி படிப்பு என்பதால் மகிழ்ச்சியில் திகைத்தார்.