Heatwave likely to hit a few places in Perambalur district tomorrow: Collector’s notice!
பெரம்பலூர், மாவட்டத்தில் 24.4.2024 அன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், பெரம்பலூர், மாவட்டத்தில் 24.4.2024 நாளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு தெரிவித்துள்ளார்.