அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் மற்றும் படிகள் மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலுார் மற்றும் அரியலுாரில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மாநில செயலாளர் மகேந்திரன், பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழக ஆசிரியர் கூட்டணி கருப்பையா உள்ளிட்ட 195 பெண்கள் உட்பட 587 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலுார் சப்–கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மறியலில் ஈடுபட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் நம்பிராஜ், பொது செயலாளர் இளம்பரிதி உள்ளிட்ட 95 பெண்கள் உட்பட 210 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்தில் மொத்தமாக 992 பேரை போலீஸார் கைது செய்தனர்.