Helmut thieves detained near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி கனிமொழி (வயது 35) இவர் தையற்பயிற்சி ஆசிரியர். இவர் சென்ற மாதம் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து விட்டு பெருமத்தூர் & முருக்கன்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் கீழப்புலியூருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கனிமொழி கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு வேகமாக தப்பி விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் பழைய குற்றவாளிகள் அரியலூர் மாவட்டம், கோயில்எசனை கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (வயது 35) திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்த மனோஜ்குமார் (32) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்த போது இருவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்று பல இடங்களில் வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த மங்கலமேடு போலீசர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.