Help Christian women who are members of the Association Committee are invited to join the collector Namakkal
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிறித்தவ சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், சிறு தொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நாமக்கல் மாவட்ட கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு துவங்கப்பட உள்ளது.
இச்சங்கத்தில் ஒரு கவுரவ செயலாளர், 2 கவுரவ இணைச் செயலாளர்கள், 3 உறுப்பினர்கள் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்களில் சமூகப் பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி மிக்க ஆர்வமுடன் செயல்படும் தலைசிறந்த பிரமுகர்கள் மாவட்ட கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆதரவற்ற கிறித்தவ ஏழை மற்றும் வயதான கிறித்தவ பெண்களுக்கு உதவிடும் வகையில் கிறித்தவ மகளிர் உதவும் சங்கத்தில் பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள் தங்களது முழுவிபரங்கள் அடங்கிய புகைப் படத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.