Herbal Exhibition and Free Siddha Medical Camp in Namakkal on 26th

நாமக்கல்லில் வருகிற 26ம் தேதி மூலிகை கண்காட்சி மற்றும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

சித்த மருத்துவத்தில் முதல் சித்தராக விளங்கும் அகத்திய முனிவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். இதையொட்டி கடந்து ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

வருகிற 26ம் தேதி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட சித்த மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தேசிய சித்த மருத்துவ திருவிழா நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.

மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளரசு பேரணியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து 10 மணிக்கு சுமார் 400 மூலிகைகள் கொண்ட மூலிகை கண்காட்சி துவக்க விழா மற்றும் இலவச சித்த மருத்துவ சிகிச்சை துவக்க விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்து சிகிச்சை முகாமை துவக்கி வைக்கிறார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி வரவேற்கிறார்.

நாமக்கல் எம்.பி சுந்தரம், எம்எல்ஏ பாஸ்கர், டிஆர்ஓ பழனிச்சாமி, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் உஷா, துணை இயக்குனர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கின்றனர்.

முகாமில் கலந்துகொள்பவர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். முடிவில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிஉதவி மருத்துவ அலுவலர் தமிழ்செல்வன் நன்றி கூறுகிறார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!