
Herbal Exhibition at NSS Camp near Namakkal
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடியில் நடைபெற்ற என்எஸ்எஸ் திட்ட முகாமில் மூலிகைக் கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வேட்டாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இதையொட்டி மூலிகைக் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஸ் மருத்துவ அலுவலர் பூபதிராஜா கலந்துகொண்டு அன்றாட வாழ்வில் சித்த மருத்துவ மூலிகைகளின் முக்கியத்துவம் பற்றியும், நோய் வரும் வழிகளையும் நோய் தடுக்கும் வழி முறைகளையும் அன்றாட வாழ்வியலில் மூலிகைகளை பயன்படுத்துவது பற்றியும் விளக்கமாக கூறினார்.
100-க்கும் மேற்பட்ட மூலிகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் லட்சுமி, புவனேஸ்வரி, பா.புவனேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி நன்றி கூறினார்.