Herbal medical training for poultry farmers: Namakkal Veterinary Medical College
நாமக்கல்லில் வரும் 28ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்போருக்கு மூலிகை மருத்துவம் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிகோழிகளுக்கு மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் கோபால கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கோழிகளுக்கு மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கோடை மழைக் காலங்களில் நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளை மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி திங்கள் கிழமை பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.