Hero XOOM launch event! Happened this evening at Sivagamam Motors, Perambalur!
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள சிவகாமம் மோட்டர் நிறுவனத்தில், ஹீரோ கம்பனியின் XOOM ஸ்கூட்டர் அறிமுகவிழா, சிவாகமம் மோட்டார்ஸ் வழிகாட்டி பச்சமுத்து தலைமையில் நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் கே.கே. கருப்பசாமி, துணை தலைவர் பெரம்பலூர் நகராட்சி து, ஹரிபாஸ்கர், கே.டி மோட்டார்ஸ் உரிமையாளர் சகாய நிர்மலா, வாடிக்கையாளர் கணேசமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சிவகாமம் மோட்டார்ஸ் இயக்குனர்கள் இரா.ப.பரமேஷ்குமார், துளசிதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.கே. கருப்புசாமி கலந்து கொண்டு முதல் விற்பனயை தொடங்கி வைத்தார். ராணி மோட்டார்ஸ் டி.ஆர். சிவசங்கர், விற்பனை மேலாளர் கார்த்திகேயன், சர்வீஸ் மேலாளர் உள்ளிட்ட பல விற்பனை மற்றும்தொழில் நுட்ப ஊழியர்கள், நிதி நிறுவனங்கள் உரிமையாளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ சூம் ஸ்கூட்டர் 5 வண்ணங்களில் கிடைக்கிறது. 110 சிசி திறன் கொண்டது, 60 கி.மீ மைலேஜ் தரக் கூடியது. 0 விலிருந்து 60 கி.மீ வேகத்தை 9.35 வினாடிகளில் எட்டக் கூடியது. புதிய மாடலில் சீட் , கைப்பிடி, எல்.இ.டி விளக்குகள், புளுதூத், மற்றும் ஏரோ டைனமிக் டிசைன், டியூப்லஸ் டயர்கள், டிஸ்க் பிரேக் என பல அம்சங்களுடன் 45 டிகிரி கோணத்தில் திரும்பினார் ஒளிரக் கூடிய புதிய இடது, வலது பகுதியில் கார்னர் பென்டிங் லைட்டுகள் என மனதைப் பறிக்கும் 5 வண்ணங்களில் கிடைக்கிறது. அதிக வசதி கொண்ட சீட் அடியில் உள்ள பூட் பேஸ், லைட்டுகள் புது விதமாக ஹீரோ வடிவமைத்துள்ளது.
விலை எக்ஸ் ஷோ ரூம் விலை. ரூ. எல். எக்ஸ் ரூ74, 399, வி.எக்ஸ் ரூ. 77,599, இசெட் எக்ஸ் ரூ. 82,499 என்ற விலையில் கிடைக்கிறது. பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் ஓட்டும் வகையில் ஸ்டைலிசாக உள்ளது.
முன்னதாக, சிவகாமாம் ஹீரோ பணியாளர் ஜெயந்தி வரவேற்றார். விற்பனை மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.