Higher education project in Thokaimalai insisting on the central government: Parivendar, the BJP candidate who collected votes for the lotus symbol, is confirmed!

தோகைமலை அருகே ஆர்டி மலையில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் 2024 தாமரை சின்னத்தில் பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் 1500 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்து வாக்குகள் சேகரித்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பெரம்பலு{ர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர். டி.ஆர். பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தோகைமலை ஒன்றியத்தில் உள்ள ஆர்டிமலை, காவல்காரன்பட்டி, கல்லடை, தோமைகலை, கழுகூர், கள்ளை, நெய்தலூர் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

கடந்த முறை வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். அதற்கு நான் கொடுத்த வாக்குறுதியாக 6 தொகுதிகளில் 1200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வியாக ரூ.118 கோடி சொந்த செலவில் பல்வேறு துறைகளில் மாணவ மாணவிகளை படிக்க வைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம். தொடர்ந்து அவர்களை படித்து வரும் மாணவ மாணவியருக்கு படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன் என்றும்,

இதனைத்தொடர்ந்து 2024 மீண்டும் தாமரை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்தீர்கள் என்றால் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு உயர் சிகிச்சை பெறுவதற்கு ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

இதேபோல் பெரம்பலூர் பகுதிகளில் ரயில்வே திட்டம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன். என்னை பாராளுமன்ற உறுப்பினராக ஆன பின்னர் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து இந்த தோகைமலை பகுதிக்கு தனிக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தருவேன் என்றும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி தோகைமலை பகுதிக்கு உயர் கல்வி கொண்டு வருவேன் என்றும் மேலும் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து மக்கள் மத்தியில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இதன்மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைவதற்கு வழிவகை செய்வேன் என்று தெரிவித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தார்.

இந்த பிரசாரத்தின்போது ஐஜேகே பொது செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியநாதன், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா, மாவட்ட செயலாளர் விநாயகா பிச்சை, பிஜேபி மாநில மகளிர் அணி தலைவி மீனா வினோத்குமார், ததேக மாவட்ட செயலாளர் அருள் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெண்கள் ஆண்கள் என ஆங்காங்கே பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!