Hindu Munnani demonstration protest in Perambalur
பெரம்பலூர் : பெரம்பலூரில் மாவட்ட இந்து முன்னணியினர் பழைய பஸ்நிலைய பகுதியில் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இந்துக்கள் ஏறத்தாழ 300 முதல் 350 பேர் வசிக்கின்றனர். அங்கு இந்துக்கள் (ஆதிதிராவிடர் வகுப்பு) இறுதி ஊர்வலம் பொதுப்பாதையில் செல்வதற்கு தடை ஏற்படுத்துவதை கண்டித்தும்,
முஸ்லீம்களாக கட்டாய மதம் மாற்றம் செய்துகொள்ளவேண்டும், என்று கூறியும், அதற்கு உடன்படாத தலித் இந்துக்களை கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். திருச்சி கோட்ட செயலாளர் திருப்பட்டூர் குணசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து விளக்க உரையாற்றினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நகர தலைவர் கஜேந்திரன் நன்றி கூறினார்.