Holidays to Tasmac shops on 16, 21, 26 in Namakkal district

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் நாள் மற்றும் 21ம் தேதி திங்கள் கிழமை வள்ளலார் நினைவு நாள் மற்றும் 26ம் தேதி சனிக்கிழமை குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு அன்றைய தினங்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள்,லைசென்ஸ் பார்கள் மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.
அரசு உத்திரவின் மூன்று தினங்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், லைசென்ஸ் பார்கள் மூடிவைக்க வேண்டும். மேற்கண்ட நாளில் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பார்கள் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொரிவித்துள்ளார்.