Home burglary in Perambalur
பெரம்பலூர் நகராட்சி, 4வது வார்டு ரோஜா நகரைச் சேர்ந்தவர்கள் பரிதாபானு, அவரது சையது முஸ்தபா வெளியூர் சென்று விட்டதால், தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு, ரெங்கா நகரிலுள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு தூங்குவதற்காக சென்று விட்டு, இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் 4 பூட்டுகளை பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பரிதாபானு பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.