Hosur’s Lover’s murders are condemnable: PMK Founder Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடுகொண்டபள்ளியைச் சேர்ந்த காதல் இணையர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகில் படுகொலை செய்து காவிரி ஆற்றில் வீசப்பட்டனர் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை.
நாகரிக சமுதாயத்தில் இத்தகைய படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இனி வரும் காலங்களில் இத்தகைய படுகொலைகள் நடக்காமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும், சீர்திருத்தங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.